Unave marunthu

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ பயன்கள் (பரங்கிக்காய்), Unave marunthu,Madurai Local Directory

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ பயன்கள் (பரங்கிக்காய்)

மஞ்சள் பூசணிக்காய் மருத்துவ குணங்கள்

பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும். இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.
மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.
வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.
இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது. Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது. பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது. ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம். தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.
பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.
உடல் சூட்டைத் தணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பூசணிக்காய், சிறுநீரக வியாதிகளையும் குணப்படுத்த வல்லது.
உடல் வலி உள்ளவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி சரியாகும்.
பூசணிக்காயின் நீர்விதை, நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் ஆகியவற்றை நீக்கப் பயன்படுகிறது.
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிக்கவும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.
இதயம் பலவீனமாக இருப்பவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல்,நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும். 
பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.
பூசணிக்காயின் தோல் மற்றும் பஞ்சு பகுதிகளை நீக்கி, அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பின் அதன் சாற்றை எடுத்து, நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
பூசணிக்காய் விதைகளை நான்கு காயவைத்து பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும்.

மலச்சிக்கல்

உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுகிறதா? என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியவில்லையா? அப்ப மஞ்சள் பூசணி ஜூஸை தினமும் குடியுங்கள். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றுப் போக்கு பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்.

மஞ்சள் பூசணி சூப்

என்னென்ன தேவை?
பரங்கிக்காய் - 1 கப் (சின்னச் சின்னதாக சதுரங்களாக வெட்டியது),
சின்னதாக நறுக்கிய வெங்காயம் - 2,
வெங்காயத் தாள் - 1 கட்டு,
சிறியதாக நறுக்கிய கேரட் - 1,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
கருப்பு மிளகு - ருசிக்கு,
உப்பு, தண்ணீர் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயை சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிற மாகும் வரை வதக்கவும்.
அதில் பரங்கிக்காய், கேரட், சிறிது வெங்காயத் தாள் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் உப்பு, தண்ணீரும் சேர்த்து சமைக்கவும்.பிறகு இதனை ஆறவைத்து நன்கு மசிக்கவும்.
சாப்பிடும் முன் சூடுபடுத்தவும். மிளகு மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து அலங்கரிக்கவும்



Hits: 1729, Rating : ( 5 ) by 1 User(s).