Unave marunthu

முள்ளங்கி மருத்துவ பயன்கள், Unave marunthu,Madurai Local Directory

முள்ளங்கி மருத்துவ பயன்கள்

முள்ளங்கி Radish

முள்ளங்கிக் கிழங்கின் (தாவர வகைப்பாடு : Raphanus sativus) இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.
தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.
முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது.
சரும வியாதிகளுக்கு மகத்துமான நன்மைகளை தருகிறது சரும வியாதிகள். படர்தாமரை நோய். முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தேமல், மங்கு, எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும்

முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

முள்ளங்கி ஜூஸைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்

சமைக்காத மற்றும் சமைத்த முள்ளங்கியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் எடையைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். ஆனால் முள்ளங்கியை பச்சையாக அப்படியே சாப்பிடுவதை விட, ஜூஸ் வடிவில் உட்கொள்வது மிகவும் சிறந்த வழி. இதற்கு காரணம், முள்ளங்கியை ஜூஸ் வடிவில் எடுப்பதன் மூலம், உடலால் அதில் உள்ள சத்துக்களை வேகமாகவும் எளிதாகவும் உறிஞ்ச முடியும். முள்ளங்கி ஜூஸில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு போன்றவை வளமாக உள்ளது.
முள்ளங்கி ஜூஸ் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட் போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள், வைரஸ்கள் போன்றவற்றை வெளியேற்ற உதவும்.
முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும்.
கல்லீரலில் உள்ள அதிகப்படியான அளவில் இருக்கும் பிலிரூபினை வெளியேற்றி, மஞ்சள் காமாலையில் இருந்து முள்ளங்கி ஜூஸ் விடுவிக்கும்.
முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளது. ஆய்வுகளிலும், முள்ளங்கி ஜூஸ் வயிறு, குடல், சிறுநீரகம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோய்களைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.
முள்ளங்கியை அரைத்து சாறு எடுத்து, அதை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால், தலைமுடி உதிர்வது தடுக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
1/2 கப் முள்ளங்கியில் 1 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது. ஒருவர் நார்ச்சத்து எடுக்கும் அளவை அதிகரித்தால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்போர், ஸ்நாக்ஸ் வேளையில் முள்ளங்கி ஜூஸைக் குடித்து வாருங்கள்.

முள்ளங்கி ஜூஸ் தயாரிப்பது எப்படி?


Hits: 2379, Rating : ( 5 ) by 4 User(s).