Deprecated: Creation of dynamic property biz::$db_conn is deprecated in G:\PleskVhosts\madurai-biz.com\maduraibiz\classes\db.php on line 16
Unave marunthu,முருங்கைக்காய் மருத்துவ பயன்கள்,Madurai Local Directory

Unave marunthu

முருங்கைக்காய் மருத்துவ பயன்கள், Unave marunthu,Madurai Local Directory

முருங்கைக்காய் மருத்துவ பயன்கள்

முருங்கைக்காய் பொதிந்து கிடக்கும் மருத்துவ பயன்கள்

Drumstick tree (முருங்கை) Health Benefits
முருங்கைக்காய் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

சுவாச பிரச்சனைகள்

ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள முருங்கைக்காயை பக்குவம் செய்து தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. நுரையீரலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

நீரிழிவு நோயில் டைப் 2

நீரிழிவு நோயில் டைப் 2 வகை நீரிழிவு நோய் சற்று கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும் ஒரு நோயாக இருக்கிறது. முருங்கைக்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் இந்த வகையான நீரிழிவு நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இன்சுலின் போல செயல்பட்டு, இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இதனால் நீரிழிவு பிரச்சனை கொண்டவர்களுக்கு நன்மையை உண்டாக்கும் ஒரு இயற்கை உணவாக முருங்கைக்காய் இருக்கிறது.
முருங்கைக்காய் அதிகளவு விட்டமின் சி-யைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கையில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.
இதில் தாதுஉப்புக்கான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. போன்றவைகள் உள்ளன.
முருங்கையில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கை, நாட்டு முருங்கை, செடிமுருங்கை என பலவகைப்படும். இதில், நாட்டு முருங்கை மருத்துவக் குணமும், சுவையும் அதிகமாக இருக்கும். செடி முருங்கையில் காய்கள் சற்று சதைபற்றுடன் இருக்கும்.

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள்

1. முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
2. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
3. வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.
4. குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.
5. மேலும் மலச்சிக்கலால் அவதி படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
6. முருங்கைக்காயில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுகிறது. முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகின்றன.
7. முருங்கைக்காயானது தொண்டை கரகரப்பு, சளி மற்றும் தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் வல்லது.
8. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம், போன்றவற்றை குணப்படுத்துகிறது.
9. முருங்கைக்காய் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை கொண்டது.
10. முருங்கைகாயில் செரோடோனின், டோபமைன் மற்றும் நோரர்டேன்லைன் போன்றவை உள்ளன. இவை நினைவாற்றல், மனநிலை மற்றும் உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
11. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் முருங்கை பூ, முருங்கை இலை அதிக அளவில் சாப்பிடும் பொழுது நரம்புகளுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும்.
12. முருங்கை பூ மற்றும் காயை உண்ணும்பொழுது நியாபக மறதியை போக்கி, நினைவாற்றலைத் தூண்டும்.

முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள்

முருங்கையைப் போல் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி வேறு எந்தக் கீரைக்கும் கிடையாது. இதை சர்வரோக நிவாரணி என்று சொன்னால் அது மிகையாது. சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.

முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்.

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை

முருங்கைக் கீரை ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்....

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.

முருங்கைக் கீரை பொரியல் செய்வது எப்படி

முருங்கைப் பூ

முருங்கைக் கீரையில் முருங்கைப் பூவிலும் அதன் கீரையில் உள்ள சத்துகள் அனைத்தும் உள்ளதால் இவை பலவகையான மருத்துவ குணங்களில் சிறந்து காணப்படுகிறது.

உடலின் உள்ள அதிகபடியான சூட்டைத் தணிக்கிறது.

விந்து விருத்தி அடைந்து ஆண்மையை அதிகப்படுத்துகிறது.

உடம்பில் உண்டாகும் வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு உகந்ததாக உள்ளது.

கண்வலி மற்றும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.

ஞாபக சக்தியைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.

பித்தத்தை குறைத்து,நரம்பு தளர்ச்சியை நீங்கச் செய்கிறது.

நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்துகிறது.

முருங்கைக்காய் சாம்பார் செய்வது எப்படி?,
Murungakkai Sambar in Tamil


Does moringa powder help in weight loss?

Moringa powder can be used to prepare morning tea which can result in weight loss. Not just weight loss, it can help you manage diabetes, hypertension and asthma. Moringa helps in reducing the fat formation and it also promotes fat breakdown. Enhance your weight loss process with Magic Moringa Powder.

How much moringa powder should I take for weight loss?

Moringa powder is high in fiber, containing 7.6 g in the recommended 40 g portion size. Adequate fiber intake promotes good digestive health, slows the absorption of carbohydrates, helps prevent disease, and can aid in weight loss. Adults are recommended to get between 25 and 35 g of fiber daily.

Hits: 2264, Rating : ( 4.5 ) by 8 User(s).