Unave marunthu

பூசணிக்காய் மருத்துவ பயன்கள், Unave marunthu,Madurai Local Directory

பூசணிக்காய் மருத்துவ பயன்கள்

Pumpkin (பூசணி) Health Benefits

பூசணி கொடியில் காய்க்கும் காய். அதிக செலவு இல்லாமல் வீட்டு தோட்டத்திலேயே செழிப்பாக வளரக்கூடியது. இதில் விட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைவாக உள்ளன. பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும்.
ஆஸ்துமா, சர்க்கரை நோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் கீல்வாதம் போன்றவையும் வராமல் தடுக்கும் தன்மை உள்ளது. பூசணி சாறு சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் புற்றுநோய்களை கட்டுப்படுத்தலாம். இதில், பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். பூசணியில் உள்ள ‘ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்‘ என்ற சத்து உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் 23 சதவிகிதம் அதிகரிக்கும். சூரிய வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும், சரும புண்களை ஆற்றவும், தழும்புகளை மறைய செய்யவும் பூசணிக்காயை சாப்பிட்டு வந்தால் பயனடையலாம். உடல் எடையை குறைக்க பூசணிக்காயை சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், எந்த வயதினரும் பூசணிக்காயை சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் நீரின் அளவினை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும்.
மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும். நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.

மருத்துவ பயன்கள்:

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்,
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.
பூசணிக்காய் விதையில் உயர்தர துத்தநாகம் அடங்கியுள்ளது. இது டெஸ்ட்டோஸ்டிரன் ஹார்மோன்குறைபாட்டினை சரிசெய்யும். மேலும் இதில் உள்ள பி, இ, சி, டி மற்றும் கே வைட்டமின்கள் ஆண்களின் செக்ஸ் உணர்வை இயற்கையாக தூண்டும், அதுமட்டுமின்றி தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது.

குழந்தைகளுக்கான தூயத்தமிழ் பெயர்கள்


Hits: 921, Rating : ( 4.3 ) by 7 User(s).