Mooligai maruthuvam

நித்திய கல்யாணி புற்றுநோய்க்கு மருந்தாகும், Mooligai maruthuvam,Madurai Local Directory

நித்திய கல்யாணி புற்றுநோய்க்கு மருந்தாகும்

Madagascar Periwinkle - நித்திய கல்யாணி

நித்ய கல்யாணி வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோ தெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. நித்ய கல்யாணி. ‘நித்ய கல்யாணி’ தாவரத்தில் உள்ள புற்றுநோய்க்கான அம்சம் மற்றும் அதன் பிற மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
ஐந்து இதழ்களையுடைய வெண்மை அல்லது வெளிர் ஊதா(Purple) நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். சாதாரணமாக வறண்ட காட்டுப்பகுதிகளிலும் விளையும் என்பதால், சுடுகாட்டுப் பூ, கல்லறைப்பூ என்றும் அழைக்கின்றனர். இதில் நூற்றுக்கணக்கான ஆல்கலாய்டுகள் இருந்தாலும், Vinblastine, Vincristine எனும் இரு முக்கிய உயிர் வேதிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த இரு ஆல்கலாய்டுகளும் புற்றுநோயை கட்டுப்படுத்த மற்றும் முற்றிலும் குணப்படுத்தப் பயன்படுகின்றன. சில வகை மார்பகப் புற்றுநோய்கள், தோல் புற்றுநோய்கள், நெறிகட்டியால் வரும் புற்றுநோய்கள் மற்றும் லுக்கேமியா, லும்போமா எனப்படும் ரத்த புற்றுநோய்கள் மற்றும் மூளைப்புற்றுநோய்க்கும் மருந்தாகப் பயன்படும் என்பதை நவீன ஆய்வின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
விதைப்பையில் ஏற்படும் புற்று, சிறுநீர்ப்பையில் ஏற்படும் புற்று, நுரையீரல் புற்று மற்றும் 'லிம்ப்போசைட்ஸ்' எனும் ரத்த வெள்ளை அணுக்களைப் பாதிக்கும் செல்கள் ஆகியவற்றுக்கும் இந்த வேதிப்பொருட்கள் மருந்தாகின்றன. நித்திய கல்யாணியில்இருந்து பெறப்படும் ‘வின்கிரிஸ்டின்’ பல கூட்டு மருந்துகளோடு ‘லுக்கேமியா’ எனும் ரத்தப்புற்று நோய்க்கும், குழந்தைகளைப் பாதிக்கும் புற்றுக்கட்டிகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புற்றுநோய்க்காக மட்டுமல்லாமல் நித்யகல்யாணியின் வேரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடைய. நீரிழிவு சிகிச்சைக்காக இதன் வேரை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறோம். 400 அல்லது 500 மிலி கிராம் அளவு வேரின் சாறை கஷாயமாக இரண்டு வேளையும் சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நல்ல கட்டுக்குள் வரும் அல்லது வேரை காய வைத்து பொடி செய்தும் சாப்பிடலாம்.

நித்திய கல்யாணி பயன் படுத்தும் முறை

நித்திய கல்யாணி பூக்கள் 10 முதல் 15 எடுத்து அதனோடு மஞ்சள் சேர்த்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்து தேன் சேர்த்துப் பருகி வர எவ்வகைப் புற்றுநோயும் விலகும்.
நித்திய கல்யாணி இலைச்சாறு இரண்டொரு தேக்கரண்டி எடுத்து வெருகடி மஞ்சள் சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் சர்க்கரை நோய் தணியும். பேதியும் நிற்கும்.
நித்திய கல்யாணி செடியின் வேர்ப்பகுதியை எடுத்து சுத்திகரித்து மிளகு, சீரகம் இரண்டையும் வெருகடி அளவு எடுத்து அதனுடன் 10 கிராம் நித்திய கல்யாணி வேரையும் சேர்த்து நீர் விட்டு தீநீராய்க் காய்ச்சி பருகுவதால் பல் வலி, உடல் வலி ஆகியன போகும்.
நித்திய கல்யாணி பூக்கள் 10 இலைகள், 5 மாதுளை தோல் 10 கிராம் அளவு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு, அரை டம்ளராகச் சுருங்கக் காய்ச்சி உடன் தேவையான சுவைக்குத் தேன் சேர்த்து தினம் இருவேளை சாப்பிட அதிக ரத்தப்போக்குடன்கூடிய மாதவிலக்கு குணமாகும்.
நித்திய கல்யாணி இலைகள் ஐந்துஉடன் வெருகடி அளவு சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து அரை டம்ளர் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து பாதியைக் காலையிலும், மீதியை இரவு படுக்கப் போகும் முன்னும் சாப்பிட்டு வர தொண்டைக்கட்டு, நுரையீரல் தொற்று ஆகியன விரைவில் குணமாகும்.
நித்திய கல்யாணி இலை ஐந்தோடு வெருகடி அளவு சீரகம் சேர்த்து தீநீராக்கிப் போதிய இனிப்பு சேர்த்து பருகி வர ரத்த ஓட்டம் சீர்பெறும். இதனால் மன அழுத்தம், தலைவலி, மயக்கம் ஆகியன குணமாகும்.
நித்திய கல்யாணி செடியின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து சிறிது சுக்கு, சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து தினம் இருவேளை அருந்தி வர வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும்.
நித்திய கல்யாணி பூக்கள் 10 எடுத்து அதனுடன் சிறிது மிளகு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு குணமாகும்.
நித்திய கல்யாணி பூக்களை பத்து எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் கண்களைக் கழுவ கண் நோய்கள் குணமாகும். இதைக் கொண்டு ஆறாதப் புண்களைக் கழுவி வர விரைவில் ஆறும்.
நித்திய கல்யாணி பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும்.



Hits: 1166, Rating : ( 5 ) by 1 User(s).