Deprecated: Creation of dynamic property biz::$db_conn is deprecated in G:\PleskVhosts\madurai-biz.com\maduraibiz\classes\db.php on line 16
Mooligai maruthuvam,நல்வேளை, தைவேளை மூலிகை, Cleome gynandra herbal plant,Madurai Local Directory

Mooligai maruthuvam

நல்வேளை, தைவேளை மூலிகை, Cleome gynandra herbal plant, Mooligai maruthuvam,Madurai Local Directory

நல்வேளை, தைவேளை மூலிகை, Cleome gynandra herbal plant

MEDICINAL BENEFITS OF NALLA VELAI MOOLIGAI

Common name: Wild Spider Flower, African spider-flower, cat whiskers, Bastard-mustard • Hindi: jakhiya, safed hulhul, parhar, safed bagro • Marathi: पांढरी तिलवन Pandhari tilvan, kanphodi, mabli • Tamil: taivelai, nalvelai, velai, acakanta • Telugu: vaminta, thella vamita, thivezhai, vaaminta • Kannada: kiloni, kirikaala, maamballi gida • Sanskrit: अजगंधा Ajagandha
நீண்ட காம்புடன் நன்றாக விரிந்த மணமுடையா இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறுஞ்செடிகள். மழைக்காலங்களில் தமிழகமெங்கும் காணப்படும். இதனை நல்ல வேளை, தை வேளை என்றும் அழைப்பதுண்டு. நல் வேளை இலை, பூ, விதை ஆகியவை மருத்துவ பயனுடையது.

நல்வேளை மூலிகையின் குணம்

இலை நீர்க்கோவை நீக்கும், பூ உடல் எடையை குறைக்கவும், பசியை உண்டாக்கவும். விதை வயிற்றுப் புழுக் கொல்லியாகவும் குடல் வாய்வு அகற்றியாகவும் பயன்படும்.

நல்வேளை மருத்துவ பயன்கள்

சைனஸ் பிரச்சினை தீர்க்கும் நல்லவேளை மூலிகை!, ஒற்றைதலைவலியும் தீரும், தும்மல் குறைய

பல வருடங்களாக இருக்கும் ஒற்றைதலை வலிக்கு அதிக அளவு நல்வேளை மூலிகையை இடித்து பிழிந்து விட்டு சக்கையை தலை முழுவதும் பரப்பி ஒரு துணியால் கட்டி 15 நிமிடம் கழித்து அந்த இலைச் சக்கையை பிழிய தலைநீர் சாறு போல் வெளியேறும், நீர்க்கோவை, தலைபாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து அதேபோல் செய்ய வேண்டும். இவ்வாறு மூன்று தடவை செய்ய நாட்பட்ட தலைவலி தீரும்.
நல்வேளை இலைச்சாறு 1 துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.
இலையை அரைத்து பற்றுப்போட சீழ் பிடித்து கட்டிகள் உடைந்து ஆறும்.
விதையை நெய் விட்டு வறுத்து பொடி செய்து சிறுவர்களுக்கு அரைகிராம், பெரியவர்களுக்கு 4 கிராம் வீதம் காலை மாலை என மூன்று நாட்களுக்கு கொடுத்து நான்காம் நாள் பேதிக்கு கொடுக்க குடலில் உள்ள தட்டை புழுக்கள் அழியும் .
நல்வேளை மூலிகை
நல்வேளை இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6, சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மிலி யாக காய்ச்சி, தினமும் 3 வேளை 50மிலி அளவு குடித்து வர வாதசுரம் சீதளச்சுரம் ஆகியவை தீரும்.
நல்வேளை பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கபம், கண மந்தம், மூச்சுத்திணறல், சுரம், நீர்க்கோவை ஆகியவை தீரும்.
கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் சந்தேகநோய், அவர்களை மனநோயாளியாகவே மாற்றிவிடும். இதன் இலையை பறித்து அதனுடன் அரைக்கீரையை கலந்து சாப்பிட்டு வந்தால் சந்தேகநோய் போகும். மனம் அமைதியடையும்.



Hits: 3980, Rating : ( 5.6 ) by 8 User(s).