Mooligai maruthuvam

ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள், Mooligai maruthuvam,Madurai Local Directory

ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்

ஆடாதோடை அல்லது ஆடாதொடை, வாசை Malabar nut

மருத்துவ பயன்பாடுகள்
இம்மூலிகை இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.

"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி."
- (அகத்தியர் குணவாகடம்)
இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது.
இந்தத் தாவரம் முக்கியமான வேலிப் பயிராக இருக்கிறது. மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம். இது கைப்பு சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது.
நெஞ்சில் சளி, அதனுடன் வலி உடலில் தசைப்பகுதிகளில் வலி போன்றவற்றிற்கு ஆடாதொடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள். இது சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
நுரையீரலைப் பலப்படுத்த ஆடாதோடை சிறந்த மருந்தாக உள்ளது. இது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள சளியை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
சளித் தொல்லை அணுகாது. நுரையீரல் பலம் பெறும். ரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை ஆடாதோடைக்கு உண்டு.
ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்து தினமும் காலை வேலையில் 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், சளி, இருமல், இரைப்பு, நீங்கும். நெஞ்சுச் சளியைப் போக்கி உடலை சீரான நிலையில் வைத்துக்கொள்ளும். இதில் பச்சயம் அதிகமாக இருப்பதால் நெஞ்சுச்சளி, இருமல் போன்றவற்றை உடனே மாற்றும். குத்து இருமல் தொண்டைக்கட்டு போன்றவையும் நீங்கும்.
உடல் வலிகள் நீங்க : உடலில் உண்டாகும் கழுத்துவலி, கை கால் மூட்டு தோள்பட்டை வலி போன்றவை நீங்க, உலர்ந்த ஆடாதோடை இலைகளுடன் மஞ்சள், வசம்பு மற்றும் சுக்கு இவற்றை பொடியாக்கி, தவிட்டுடன் சேர்த்து துணியில் கட்டி, ஒரு சட்டியில் இந்த துணி முடிச்சை வைத்து சூடாக்கி, வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்துவர, வலிகள் நீங்கும்.
அதிக சளியால் உண்டாகும் தலைவலி தலை பாரம் நீங்க, ஆடாதோடை இலையுடன் அதன் வேர்ப்பட்டை, கண்டங்கத்திரி சேர்த்து பொடித்து காய்ச்சிய நீரில் தேன் அல்லது கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் நீங்கும்.
ஆடாதோடை மலரை சட்டியில் இட்டு வதக்கி, கண்களின் மீது வைத்து கட்டிவர, கண்களில் உண்டாகும் வியாதிகள் யாவும் நீங்கிவிடும். இதுபோல எண்ணற்ற நற்பலன்களை மனிதனுக்கு தரும் ஆடாதோடை ஒரு அற்புத மூலிகை மட்டுமல்ல, மனித உடலுக்கு நீடித்த ஆயுள் தரும், ஒரு காயகற்ப மூலிகையுமாகும்.

Hits: 832, Rating : ( 5 ) by 1 User(s).