Mooligai maruthuvam

சித்தரத்தை மருத்துவ மூலிகை, Mooligai maruthuvam,Madurai Local Directory

சித்தரத்தை மருத்துவ மூலிகை

மூலிகை மருத்துவம் - Sitharathai or சிற்றரத்தை , or சித்தரத்தை மருத்துவ குணங்கள்

மூலிகைகளில் இஞ்சியை ஒத்த இந்தியா, கிழக்காசிய நாடுகளில் அதிகம் விளையும் ஒரு மூலிகையாக “சித்தரத்தை” இருக்கிறது. இதற்கு “சீன இஞ்சி” என்கிற ஒரு பெயரும் உண்டு.

சித்தரத்தை பயன்கள் - வயிறு புண்கள்

சித்தரத்தை பொடியை நீரில் போட்டு நன்கு கலக்கி இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரிசி கஞ்சியுடன் அந்நீரை சேர்த்து பருகி வந்தால் வயிறு மற்றும் குடல்களில் இருக்கும் அல்சர் புண்கள் குணமாகும்.

ஆஸ்துமா நோய் - சித்தரத்தை பயன்கள்

ஆஸ்துமா நுரையீரலை பாதித்து சுவாசிக்கும் போது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருக்கிறது.
சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து, அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டு வருவர்களேயானால் அவர்களின் ஆஸ்துமா நோயின் தீவிரம் குறைந்து, சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படாமல் தடுக்கும்.
சித்தரத்தை - Chitharathai - Sitharathai

மலச்சிக்கல்

பலருக்கும் காலை நேரத்தில் மலச்சிக்கல் காரணமாக மலம் சரியாக கழிக்க முடியாமல் பிரச்சனை ஏற்படுகிறது. இதை போக்க சிறிதளவு சித்தரத்தையை எடுத்து, நன்கு இடித்து சலித்து வைத்து கொண்டு இரவு தூங்கும் முன்பு ஒரு சிட்டிகை அளவு பசுப்பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.

மூட்டுவலி பிரச்சனைகள்

வாதம் என்பது உடலின் காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை ஏற்படுகிறது. சித்தரத்தை தூளை கலந்த நீரில் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் பருகி வந்தால் மூட்டு வலிகள் நீங்கும். உடலின் வாதத்தன்மை அதிகரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும்.

தொண்டை

சித்தரத்தையை சிறிதளவு எடுத்து வாய்க்குள் போட்டு அதக்கி கொள்வதால் அதிகளவு உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் சிறிது சிறிதாக தொண்டைக்குள் இறங்கி தொண்டையில் சளித்தொல்லையால் ஏற்படும் குரல் கரகாரப்பை நீக்கும். சளியால் ஏற்படும் தொண்டைகட்டையும் சீக்கிரத்தில் குணமாகும்

சித்தரத்தையின் நன்மைகள்:

1.சித்தரத்தையில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் தன்மை பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்க வல்லது.
2. சித்தரத்தையின் மற்றொரு முக்கியமான பண்பாவது ஆன்டி கேன்சரஸ் பண்பு. இது கேன்சர் அணுக்களை வளர விடாமல் தடுத்து விடுகிறது. எனவே கேன்சர் நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்து.
3. உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வருபவர்கள் சித்தரத்தையை பயன்படுத்தி பாருங்கள். இது பசியை அடக்கும் தன்மை வாய்ந்தது. இதனை தொடர்ந்து எடுத்து வரும் போது உடல் எடையை குறைத்து விடலாம் என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
4. ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்பு கொண்ட சித்தரத்தையானது உள் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. மூட்டு வலி, கழுத்து வலி இருப்பவர்கள் சித்தரத்தையை பயன்படுத்தி பலன் பெறலாம்.
5. சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகளுக்கு சித்தரத்தை ஒரு நல்ல தீர்வை தருகிறது. சித்தரத்தையை எவ்வாறு பயன்படுத்துவது என இப்போது பார்க்கலாம்.

சித்தரத்தையை சளிக்கு பயன்படுத்தும் முறை:

◆1/2 இன்ச் அளவிற்கு சித்தரத்தை வேருடன் சிறிதளவு பனங்கற்கண்டை எடுத்து கொள்ளலாம்.
◆இதனை ஒரு உரலில் போட்டு நன்றாக இடித்து சிறு துண்டுகளாக செய்து கொள்ளுங்கள்.
◆ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, நாம் இடித்து வைத்த சித்தரத்தை மற்றும் பனங்கற்கண்டை சேர்க்கலாம்.
◆தண்ணீர் நன்றாக கொதித்து அதன் சாறு உள்ளே இறங்கி தண்ணீர் பாதியாக குறைந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்ளவும்.
◆இந்த நீரை வடிகட்டி சளி, இருமல் மற்றும் தொண்டை வலிக்கு குடித்து வரும்போது விரைவில் குணமடையும்.
Tags : Sitharathai,
Sitharathai infusion is a blend of traditional herbs which has a wonderful aroma that can relieve both cold and cough.

Hits: 1106, Rating : ( 5 ) by 1 User(s).