Madurai - Mooligai maruthuvam

மூலிகை மருத்துவம்,நோய் தீர்க்கும் மூலிகைகள்

குப்பைமேனி மருத்துவ பயன்கள்

குப்பைமேனி பயன்கள்

குப்பைமேனி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ பயனுடையது.
இத்தாவரத்தில் அல்கலாய்டுகள், குளுக்கோசைடுகள், அஸிடேட்கள், எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அகாலிஃபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிஃபைன், டிரைஅஸிட்டோனமைன், கெம்ஃபெரால் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன.
"கண்ணாடி விரியன்" பாம்பின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது. இப்பாம்பினால் கடிபட்டவர்களுக்கு குப்பைமேனி இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால், விஷம் உடலில் வேகமாக பரவுவதை நிறுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
குப்பைமேனி இலையை காயவைத்து பொடியாக்கி மூக்கில் இட தலைவலி நீங்கும். அல்லது குப்பைமேனி இலையுடன் சாம்பிராணி சேர்த்து அரைத்து நெற்றியில் பற்று போடா தலைவலி குணமாகும்.
உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணையுடன் செய்து காய்ச்சி உடலுக்கு தேய்த்து வந்தால் உடல் வலி தீரும்.
குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயம்பட்ட இடங்களுக்கு தடவினால் காயம் விரைவில் குணமாகும். சொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவைகட்கு பூச குணமாகும். மேனி எழிலுடன் விளங்கும். இலைச்சாறுடன் எண்ணெய் கலந்து முடக்கு வாத நோய், மூட்டுவலிக்கு தடவினால் விரைவில் குணமடையும்.
குப்பைமேனி இலையுடன் பூண்டு சேர்த்து அரைத்து பாலில் கலந்து கொடுக்க குழைந்தைகள் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறும். குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையுடன் சர்க்கரை சேர்த்து பாலில் 1 ஸ்பூன் அளவு கலந்து சாப்பிட்டு வர மார்பு வலி தீரும். உடல் குளிர்ச்சி பெறும்.
மூட்டு வலிக்கு குப்பைமேனி இலையை சாறு பிழிந்து நல்லெண்ணெய் காய்ச்சி தேய்த்து வர மூட்டு வலி குணமாகும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி வர, பெண்களின் முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும். 10 குப்பைமேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டு வர, தேக அழகும் ஆரோக்கியமும் ஏற்படும்.
மூலத்திற்குக் குப்பைமேனி சிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் 48 நாள் காலை, மாலை சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்.
மலேரியா நோய்க்கான ஆங்கில வழி மருந்துடன் குப்பைமேனி இலைகள், சாறு போன்றவற்றை மருந்தாக உட்கொண்டு வந்தால் மலேரியா கூடிய விரைவில் குணமாகும்.
பெண்கள் சிலருக்கு உடலில் ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளால் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிகள் உதிக்கின்றன. குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.